ALAM SEKITAR & CUACANATIONAL

நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 2,866 ஆக உள்ளது

கோலாலம்பூர்,  பிப் 8: பகாங் மற்றும் கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவுடன் ஒப்பிடும்போது இன்று காலை குறைந்துள்ளது. இருப்பினும் ஜொகூர் மற்றும் திரங்கானுவில் எந்தவொரு மாற்றமும் இல்லை. நான்கு மாநிலங்களில் மொத்த பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 2,866 ஆக உள்ளது.

பகாங் மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் (ஜேபிபிஎன்) செயலகம், இன்று காலை மாநிலத்தில் வெள்ள நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருவதாகவும், 847 குடும்பங்களைச் சேர்ந்த 2,797 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 18 ஆக குறைந்துள்ளது. பாதிக்கப்பட்ட 18 பேரும் கம்போங் பாடாங் லிமாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று காலை நிலவரப்படி கெமாமன் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 18 ஆக இருப்பதாகவும், ஆறு குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் தேசிய வகை பள்ளி லெம்பா ஜாபோரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் திரங்கானு ஜேபிபிஎன் தெரிவித்துள்ளது.

மேலும், ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 10 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேராக உள்ளனர். அங்கு இன்னும் இரண்டு தற்காலிகத் தங்கும் மையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.

-பெர்னாமா


Pengarang :