YB ACTIVITIES

பெர்மாத்தாங் தொகுதியில் பிப்ரவரி 26ஆம் தேதி இலவச மருத்துவ முகாம்

கோல சிலாங்கூர், பிப் 10- பெர்மாத்தாங்  சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் இம்மாதம் 26ஆம் தேதி இங்குள்ள சுங்கை தெராப் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

“அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு“ எனும் கருப்பொருளில் சிலாங்கூர் பல்கலைக்கழகத்துடன் (யுனிசெல்) இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த மருத்துவ முகாமில் இளையோர் முதல் முதியோர் வரை கலந்து கொள்ளலாம் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார்.

இந்த மருத்துவப் பரிசோதனை இயக்கத்தில் வெளி சுகாதார பணியாளர்களின் ஒத்துழைப்புடன் கண் பரிசோதனைக்கும் தாங்கள் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் சொன்னார்.

இந்த் மருத்துவ பரிசோதனை இயக்கத்தின் ஒரு பகுதியாக சிலாங்கூர் மாநில அரசின் இலவச மருத்துவ காப்புறுதி திட்டத்திற்கான பதிவு நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

இது தவிர, மனநலப் பிரச்னைகளை எதிர்நோக்குவோருக்கு உரிய நிபுணர்களைக் கொண்டு ஆலோசக சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா இஸமாயிலுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :