ECONOMY

“பிளாட்ஸ்“ திட்டத்தின் வழி 29,271 பேர் பயனடைந்தனர்- மந்திரி  புசார்

ஷா ஆலம், பிப் 10- பிளாட்ஸ் எனப்படும் பிளாட்பார்ம் சிலாங்கூர் திட்டம் கடந்த 2020ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டது முதல் இதுவரை 20,271 வணிகர்கள் பயனடைந்துள்ளனர்.

சிலாங்கூரிலுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரை குறிப்பாக சிறு மற்றும் சில்லறை வியாபாரிகளை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்கான ஊக்குவிப்பு மற்றும தகவல் தளமாக இந்த பிளாட்பார்ம் சிலாங்கூர் விளங்குகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த பிளாட்ஸ் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 20,271 பேர் பயனடைந்துள்ளனர். வாடிக்கையாளர்களின்  எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதற்கும் இந்த இந்த திட்டம் பெரிதும் துணை புரிகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த வளர்ச்சி இத்திட்டத்தின் ஆக்கத்தன்மையை  பிரதிபலிப்பதாக உள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் இலக்கவியல்மய திட்டமும் விரிவாக்கம் காண்கிறது என அவர் தெரிவித்தார்.

நோன்பு பெருநாளின் போது மட்டுமின்றி எல்லா காலங்களிலும் வணிகர்கள் வருமானத்தைப் பெற உதவும் நோக்கில் இந்த பிளாட்ஸ் 2.0 திட்டத்தை மாநில அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி தொடக்கியது.


Pengarang :