MEDIA STATEMENTNATIONAL

நோயாளி சிறுமியிடம் பாலியல் சீண்டல்- மருத்துவர் கைது

கோல திரங்கானு, பிப் 10– கெமாமான் மருத்துவனையின் சிறார் வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சந்தேகத்தின் பேரில் அம்மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் அந்தச் சிறுமியின் தாயார் கடந்த புதன் கிழமை போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து 30 வயதான அந்த மருத்துவர் நேற்று பிற்பகல் 1.30  மணிளவில் கைது செய்யப்பட்டதாக திரங்கானு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ரோஹாய்மி முகமது ஈசா கூறினார்.

தன்னை சோதிக்க வந்த மருத்துவர் உடைகளை களைந்து தன் மார்பகத்தை வருடியதாகவும் பின்னர் கைபேசியில் தன்னை பல கோணங்களில் படம் பிடித்ததாகவும் அச்சிறுமி புகாரளித்துள்ளதாக அவர் சொன்னார்.

விசாரணைக்கு உதவுவதற்காக அந்த மருத்துவரின் கைபேசியையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக  அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த மருத்துவரின் கைப்பேசியில் உள்ள படங்களின் அடிப்படையில் மேலும் பல சிறுமிகள் அந்த மருத்துவரின் பாலியல் தொல்லைக்கு ஆட்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

அந்த மருத்துவரை விசாணைக்காக தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதி இன்று பெறப்படும் என்றும் அவர் சொன்னார்


Pengarang :