ECONOMY

சாலை வரி வில்லைகளை இனி வாகனங்களில் கண்ணாடிகளில் ஒட்ட வேண்டியதில்லை

ஷா ஆலம், பிப் 10- தனிநபர் வாகனங்களில் இனி சாலை வரி வில்லைகளை காட்சிக்கு வைக்க வேண்டியதில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக, சாலை போக்குவரத்து இலாகாவின் அகப்பக்கத்திலுள்ள e-LKM மற்றும் e-LMM வாயிலாக அல்லது கைப்பேசிகளில் MyJPJ எனும் செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பொது மக்கள் தங்கள் சாலை வரியை காட்சிப்படுத்த முடியும் என்று அவர் சொன்னார்.

சாலை போக்குவரத்து இலாகாவின் சாலை வரி மற்றும் ஒட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பது உள்ளிட்ட முக்கிய சேவைகளை இலக்கவியல்மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

இந்த திட்டம் தொடக்கத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் தனிநபர் வாகனங்களை உட்படுத்தி பரீட்சார்த்த முறையில் மேற்கொள்ளப்படும். பின்னர் அது கட்டங் கட்டமாக இதர வகை வாகனங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :