HEALTHNATIONAL

நாட்டில் புதிதாக 255 கோவிட் -19 சம்பவங்கள்

ஷா ஆலம், பிப் 11: வெள்ளிக்கிழமை நாட்டில் மொத்தம் 255 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் மூன்று வெளிநாட்டவர் களிடமிருந்து கண்டறியப்பட்டன. கோவிட் -19 மொத்தச் சம்பவங்களின் எண்ணிக்கை 5,039,067 ஆக உள்ளது.

“KKMNow“ போர்ட்டலில் உள்ள மலேசியச் சுகாதார அமைச்சகத்தின் (KKM) தரவுகளின் அடிப்படையில், கோவிட்-19 காரணமாக நான்கு புதிய இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மலேசியாவில் கோவிட்-19 காரணமாக மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 36,950 ஆக உள்ளது.

நாட்டில் கோவிட்-19 தொற்று நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,992,386 சம்பவங்களாக உள்ளது என்று சினார் ஹரியான் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையத்தில் (PKRC) எந்த நோயாளிகளும் வைக்கப் படவில்லை. அதே நேரத்தில் 327 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருக்கின்றனர், அவர்களில் 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ளனர்.


Pengarang :