NATIONAL

சாலையில் சோதனை நடவடிக்கையின் போது காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தார்

பாசிர் மாஸ், பிப். 11: நேற்று ஜாலான் பாசிர் மாஸ் – ரந்தாவ் பஞ்சாங்கில் நடைபெற்ற ஓப்ஸ் சாலை சோதனையின் போது சட்டவிரோத குடியேறி ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் காவல்துறையினர் ஒருவரை மோதியது.

பாசிர் மாஸ் மாவட்டக் காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் நிக் அமினுடின் ராஜா அப்துல்லா கூறுகையில், காலை 10 மணிக்கு நடந்த இச்சம்பவத்தில் சந்தேக நபர் தப்பி செல்ல முயன்ற சமயத்தில் காவல்துறை அதிகாரி காயத்திற்குள்ளானார்.

பாசிர் மாஸ் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் (IPD) பணியில் இருக்கும் லான்ஸ் கார்ப்ரல் நசிம் அய்மன் நோர் ரெசாட் சந்தேக நபரைத் தடுக்க முயன்றார்.  அப்பொழுதுதான் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று பெரிட்டா ஹரியான் தெரிவித்தது.

“பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் மற்றும் காயத்தின் விளைவாக 13 தையல்கள் போடப்பட்டன. அதே நேரத்தில் 19 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மேல் விசாரணைக்காக பாசிர் மாஸ் மாவட்டக் காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சந்தேக நபரின் மோட்டார் சைக்கிளைச் சோதனை செய்ததில், சிகரெட் பெட்டி மற்றும் 10 சிவப்பு மாத்திரைகள் இருப்பது கண்டறியப்பட்டது, மேலும் சிறுநீர் பரிசோதனையில் அந்நபர் மெத்தாம்பேட்டமைன் எனும் போதைப்பொருளை உட்கொண்டு இருப்பது கண்டறியப்பட்டது.

1959/63 குடிவரவுச் சட்டத்தின் பிரிவு 332 K/K/6(1)(c) இன் கீழ், சரியான அடையாள ஆவணம் இல்லாததால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 117 வது பிரிவின் கீழ் சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக நிக் அமினுடின் கூறினார். .

சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 யின் 43(1) கீழ், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், சாலை விதிகளை மதிக்காமல், பாதுகாப்புப் பணியாளர்களுக்கு விபத்து ஏற்படுத்தியதற்காகச் சந்தேக நபர் விசாரிக்கப்பட்டார்.


Pengarang :