SELANGOR

மலிவு விற்பனை தொடர்ந்து ஒன்பது இடங்களில் நடைபெறுகிறது

ஷா ஆலம், பிப் 13: சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டு கழகத்தால் (பிகேபிஎஸ்) நடத்தப்படும் அடிப்படைப் பொருட்களின் மலிவு விற்பனை திட்டம் இன்று தொடர்ந்து ஒன்பது இடங்களில் நடைபெறுகிறது.

அவ்விடங்கள் ஜாமியுல் ஹசனியா மசூதி  செமந்தா  தொகுதி, ஆர்க்கிட் அபார்ட்மெண்ட், தெரதாய் தொகுதி; செலாயாங் பாரு ஜாலான் 45, தாமான் தெம்பளர் மற்றும் பிளாட் துன் தேஜா, ரவாங்.

மேலும், செண்டல் வூட் அபார்ட்மென்ட் தாசிக் புத்ரி, குவாங், கம்போங் இஜோக், இஜோக்  தொகுதி, அல்-வலாஹ் மசூதி, மேரு தொகுதி; நூருல் இஸ்லாம் மசூதி பாரிட் 2, சுங்கை புரோங் தொகுதி மற்றும் கடை ஹெச்ஜே அரன் பாரிட் 5 1/2 பாராட் , சபாக் ஆகிய இடங்களிகும் இம்மலிவு விற்பனை தொடர்கிறது.

குடியிருப்பாளர்களின் செலவினச் சுமையைக் குறைக்கும் வகையில் மாநில அரசின் திட்டமாகக் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இம்மலிவு விற்பனை ஜனவரி 16
முதல் மே வரை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.


Pengarang :