ANTARABANGSA

துருக்கி நிலநடுக்கம்- மரண எண்ணிக்கை 33,000 ஆக உயர்வு- கட்டிட மேம்பாட்டாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அந்தாகியா, பிப் 13- மிக மோசமான நில நடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய ஒரு வாரக் காலத்திற்கு பின்னர் கட்டிட இடிபாடுகளிலிருந்து மேலும் அதிகமானோரை மீட்புப் பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர்.

பாதிக்கப்பட்டப் பகுதிகளில் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அதிகாரிகள் பாடுபட்டு வரும் வேளையில் கட்டிடங்கள் இடிந்து விழுந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அருகி வரும் நிலையில் நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் நில அதிர்வுகள் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33,000த்தைத் தாண்டியுள்ளது.

கடந்த 1939ஆம் ஆண்டிற்குப் பிறகு நிகழ்ந்த மிக மோசமான நிலநடுக்கமாக இது கருதப்படும் வேளையில் மரண எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே, தங்கள் கடைகளில் உள்ள பொருள்கள் திருடப்படுவதைத் தவிர்ப்பதற்காகத் தென் துருக்கிய நகரான அந்தகியாவிலுள்ள வணிகர்கள் தங்கள் கடைகளில் உள்ள பொருள்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.


Pengarang :