ANTARABANGSA

இந்தோ-பசிபிக் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பில் ஆசியான்- இந்திய இளைஞர் தலைவர்கள் கலந்துரையாடல்

ஹைதரபாத், பிப் 13- நான்காவது ஆசியான்-இந்தியா இளைஞர் தலைவர்கள் மாநாடு நேற்று தொடங்கி வரும் வியாழக்கிமை வரை ஹைதரபாத் நகரில் நடைபெறுகிறது.

இந்தோ-பிசிபிக்கில் ஆசியான்-இந்திய பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது எனும் கருப்பொருளிலான இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் 10 ஆசியான் நாடுகளைச் சேர்ந்த 175 பேராளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டை இந்தியாவின் கலாசாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தொடக்கி வைத்தார். இரு தரப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிவகைகளை இந்த மாநாடு ஆராயும் என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

அண்மையில் 2022 ஆம் ஆண்டு இந்திய-ஆசியான் இலக்கவியல் பணி செயல் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இலக்கவியல் தொழில்நுட்பம், இலக்கவியல் உருமாற்றம், நிதி நிர்வாகம், பருவநிலை மாற்றம், வாழ்க்கை முறை மற்றும் சுற்றுசூழல் தொடர்பான அம்சங்களும் இதில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.

அரசியல், ஊடகம், கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பின்னணியைக் கொண்ட இந்த பேராளர்கள் ஆசியான்-இந்தியா பரந்த வியூக பங்காளித்துவத்தின் மேம்பாட்டிற்கான திட்டங்களை வரைவதற்கான தளமாக இந்த மாநாட்டைப் பயன்படுத்திக் கொள்வர் என்றும் அவர் கூறினார்.

பன்முகத்தன்மையான நட்புறவைக் கொண்ட ஆசியான்-இந்தியா உறவை வலுப்படுத்துவதற்கான சிறந்த தளமாக இந்த மாநாடு அமைவதாக மாநாட்டில் கலந்து கொண்டுள்ள மலேசியப் பேராளரான யனிதா மீனா லுய்ஸ் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.


Pengarang :