SELANGOR

சிலாங்கூர் எஃப்.சி. குழுவுக்கு வெ.100,000 செலவில் 250 ஜெர்சிகளைக் கும்புலான் செமேஸ்தா நிறுவனம் வழங்கியது

ஷா ஆலம், பிப் 14- சிலாங்கூர் எஃப்.சி. குழு விளையாட்டாளர்களுக்கு 250 ஜெர்சிகளை வாங்க கும்புலான் செமெஸ்தா நிறுவனம் 100,000 வெள்ளியை வழங்கியுள்ளது.

இவ்வாண்டிற்கான புதிய மலேசிய லீக் பருவத்தின் போது விளையாட்டாளர்கள் முனைப்புடன் விளையாடுவதற்குரிய உத்தேகத்தை அளிக்கும் நோக்கில் இந்த ஏற்பாட்டு ஆதரவு வழங்கப்படுவதாகக் கும்புலான் செமெஸ்தா நிறுவனத்தின் வர்த்தகத் தொடர்புப் பிரிவுத் தலைவர் சுஹாய்மி காலிட் கூறினார்.

விளையாட்டாளர்களுக்கான ஜெர்சிகள் தவிர்த்து பணியாளர்கள் அணியக் கூடிய 250 “ஹோம்“ ஜெர்சிகளையும் நாங்கள் வழங்கியுள்ளோம். சிலாங்கூர் எஃப்.சி. குழுவுக்கு எங்களின் ஆதரவைப் புலப்படுத்தும் நோக்கில் இந்த உதவியை வழங்குகிறோம் என்று அவர் சொன்னார்.

இந்த 2023 பருவத்தில் சிவப்பு மஞ்சள் குழு சிறப்பான ஆட்டத்திறனை வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில் மாநில அரசின் துணை நிறுவனமான கும்புலன் செமெஸ்தா சென். பெர்ஹாட் இந்த பங்களிப்பை வழங்கியது என்றார் அவர்.

கும்புலான் செமெஸ்தா நிறுவனத்தின் இந்த ஏற்பாட்டு ஆதரவு சிலாங்கூர் குழுவுக்குப் புதிய உத்வேகத்தையும் தன்முனைப்பையும் வழங்கும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் இப்போட்டியில் வெற்றியாளராக வாகை சூடுவதற்குரிய வாய்ப்பும் கிட்டும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


Pengarang :