SELANGOR

தாசிக் பிரு, குண்டாங் மாநிலத்தின் கூடுதல் மூல நீராகப் பயன்பட வாய்புண்டு

ஷா ஆலம், பிப் 14: சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்), மாநிலத்திற்கு கூடுதல் மூல நீராகப் பயன்படக்கூடிய தன்மை கொண்ட குண்டாங் தாசிக் பிருவை, கண்காணித்து வருகிறது.

துப்புரவு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்காகச் செலாயாங் நகராட்சி கழகத்தோடு (எம்பிஎஸ்) இணைந்து ஆய்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“செலாயாங் நகராட்சி கழகம் (எம்பிஎஸ்) உடனான இந்த ஆய்வு மற்றும் கண்காணிப்பு, ஏரி நீர் நிரம்பி வழிதல் மற்றும் நீர் திரும்பப் பாய்தல் பிரச்சனையை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய பணிகளைக் கண்டறியும். .

“நீர் பெருக்கம் ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய உடனடியாக துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

லுவாஸ் கூற்றுப்படி, தாசிக் பிரு என்பது 78 குளங்களின் ஒரு பகுதியாகும். தற்போது லுவாஸ் 98 மாற்று நீர் ஆதாரக் குளங்களை அடையாளம் கண்டுள்ளது, அவை சிலாங்கூருக்குக் கூடுதல் மூல நீரின் ஆதாரமாக இருக்கும்.

“இந்த குளங்கள் அனைத்தும் எந்த வித இடையூறு மற்றும் அவற்றின் தரத்திற்குச் சேதம் ஏற்படாமல் இருக்க லுவாஸால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்,” எனத் தெரிவிக்கப்பட்டது.


Pengarang :