NATIONAL

வெ.20 லட்சம் போலி பணக் கோரிக்கை தொடர்பில் தம்பதியர் கைது

புத்ராஜெயா, பிப் 21- தனியார் உயர்கல்விக் கூடத்திற்கு இடைநிலைப் பள்ளி மாணவர்களைச் சேர்க்கும் திட்டத்திற்கான கமிஷன் சம்பந்தப்பட்ட சுமார் 20 லட்சம் வெள்ளி போலி பணக்கோரிக்கைத் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காகக் கணவன் மனைவியை ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று கைது செய்துள்ளது.

நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த தம்பதியர் வாக்குமூலம் அளிப்பதற்காக
நேற்று காலை 11.00 மணியளவில் புத்ராஜெயாவிலுள்ள எஸ்.பி.ஆர்.எம்.
தலைமையத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்டதாக வட்டாரம்
கூறியது.

அந்த உயர்கல்விக்கூடத்தின் முன்னாள் சந்தைப் பிரிவு நிர்வாகியான சந்தேக நபர் கடந்த 2015 முதல் 2020 வரை மேற்கொண்ட இந்த மோசடி நடவடிக்கைக்கு இல்லத்தரசியான அவரின் மனைவியும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த ஆடவரை விசாரணைக்காக இன்று தொடங்கி வரும் 27ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு மாஜிஸ்திரேட் ஜூலைக்கா ரோஹானுடின் அனுமதி வழங்கிய வேளையில் அவரின் மனைவி எஸ்.பி.ஆர்.எம். ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


Pengarang :