ANTARABANGSA

துருக்கி நிலநடுக்கத்தில் குறைந்தது 42,310 பேர் இறந்துள்ளனர்

அங்காரா, பிப் 22: தெற்கு துருக்கியில் பிப்ரவரி 6-ம் தேதி ஏற்பட்ட இரண்டு சக்தி வாய்ந்த நில நடுக்கங்களின் விளைவாக குறைந்தது 42,310 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 13 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10 மணி நேரத்திற்குள், சிரியா மற்றும் லெபனான் உட்பட பல நாடுகளும் துருக்கியைத் தாக்கிய வலுவான நிலநடுக்கத்தை உணர்ந்தன.

மொத்தம் 14,740 உள்ளூர் மற்றும் சர்வதேசத் தேடல் மற்றும் மீட்பு பணியாளர்கள் தற்போது தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காகச் சம்பவ இடத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஓர் ஊடகச் சந்திப்பில் துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு, கடந்த திங்கள்கிழமை பிற்பகுதியில் துருக்கியை உலுக்கிய புதிய நிலநடுக்கத்தில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 562 பேர் காயமடைந்தனர். மேலும், இதில் 18 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று கூறினார்.

– பெர்னாமா


Pengarang :