NATIONAL

இணையப் பாதுகாப்பை வலுப்படுத்த இணையப் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கம்

கோலாலம்பூர், பிப் 25: இணையப் பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்குவதன் மூலம் இந்நாட்டில் அதன் பாதுகாப்பை வலுப்படுத்தத் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சகம் உத்தேசித்துள்ளது.

கடந்த ஆண்டு 25,000க்கும் மேற்பட்ட இணைய மோசடிகள் தொடர்பான குற்றங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக அதன் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். அதன் வகையில் அதிகரித்து வரும் இணைய மோசடி குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்காக இந்த ஆணையம் நிறுவப்பட்டது என்றார்.

“2023 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேசிய ஊழல் மையத்திற்கு (NSRC) RM10 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அறிவிப்பையும் வரவேற்கிறோம்.

“இணையக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான மூன்று முக்கிய நடவடிக்கைகள், என்எஸ்ஆர்சியை வலுப்படுத்துதல், தனிநபர் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்துதல் மற்றும் இணைய ஆணையத்தை நிறுவுதல்” என்று நேற்று அவரைப் பாராளுமன்றத்தில் சந்தித்தபோது கூறினார்.

ஒவ்வொரு மாநிலச் சட்டமன்றத்திலும் டிஜிட்டல் பொருளாதார மையத்தை (PEDi) உருவாக்கும் அரசாங்கத்தின் விருப்பத்தை வரவேற்கிறார் ஃபஹ்மி ஃபட்சில்.

“இத்திட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணைய வியாபார அறிவைக் கொண்ட சிறு வணிகர்களுக்கு உதவுவதோடு, மக்களுக்கு பயனளிக்கும்,“ என்றார்.


Pengarang :