NATIONAL

கடப்பிதழ் விண்ணப்ப முகப்பிடங்களில் நெரிசல்- வேலை நாட்களை அதிகரிக்க குடிநுழைவுத் துறை நடவடிக்கை

கோலாலம்பூர், பிப் 27- கடப்பிதழ் விண்ணப்பங்களின் அதிகரிப்பு காரணமாக குடிநுழைவுத் துறை அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வு காண மலேசியக் குடிநுழைவு இலாகா பல்வேறு ஆக்ககரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதிக நெரிசல் காணப்படும் குடிநுழைவுத் துறை அலுவலகங்கள் வார இறுதி நாட்களில் அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படுவதை உறுதி செய்வதும் இதில் அடங்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் இஸ்மாயில் நசுத்தியோன் கூறினார்.

சிலாங்கூர் மற்றும் கோலாம்பூரில் தலா ஒன்பது குடிநுழைவுத் துறை அலுவலங்களும், ஜொகூரில் ஐந்து அலுவலகங்களும் பேராக்கில் மூன்று அலுவலகங்களும் மலாக்கா, பினாங்கு மற்றும் கெடாவில் தலா ஒரு அலுவலகங்களும் கூட்ட நெரிசலை எதிர்நோக்குகின்றன என்று அவர் சொன்னார்.

குடிநுழைவுத் துறை ஊழியர்களின் மிகை நேரப் பணிக்காக ஒரு கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று வரை மொத்தம் 25 லட்சம் கடப்பிதழ்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம். அவற்றில் 45 விழுக்காடு இணையம் வாயிலாக செய்யப்பட்ட விண்ணப்பங்களாகும் என்றார் அவர்.
மக்களவையில் இன்று பெக்கான் தொகுதி தேசிய முன்னணி உறுப்பினர் டத்தோஸ்ரீ  முகமது புஸி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :