SELANGOR

ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் (ஜேகேஎஸ்பி) திட்டம் உலு லங்காட் மற்றும் கோலா லங்காட் மாவட்டங்களில் தொடரும்

கோலா சிலாங்கூர், பிப் 27: கடந்த வாரம் தொடங்கப்பட்ட ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் (ஜேகேஎஸ்பி) திட்டம் அடுத்த வாரம் உலு லங்காட் மற்றும் கோலா லங்காட் மாவட்டங்களில் தொடரும்.

மனித மூலதன மேம்பாட்டு எஸ்கோ முகமட் கைருடின் ஓத்மான் கூறுகையில், இதுவரை ஏற்பாடு செய்யப் படாதப் பிற பகுதிகளில் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் (ஜேகேஎஸ்பி) திட்டம் மேற்கொள்ளப்படும்.

“அடுத்த வாரம் நாங்கள் உலு லங்காட் மற்றும் கோலா லங்காட் ஆகிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்திப்போம்,” என்று அவர் கூறினார்.

மாநில அரசு மக்களுக்காக செயல்படுத்தும் 44 இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் (ISP) திட்டங்களை அறிமுகப்படுத்த ஜேகேஎஸ்பி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பயா ஜாரஸ் தொகுதி உறுப்பினர் (ADN) விளக்கினார்.

“44 திட்டங்கள் அரசாங்கத்தால் செயல்படுத்தப் படுவது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. இச்சிக்கலுக்குத் தீர்வு காண பல்வேறு தரப்பினரின் உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் (ஜேஎஸ்பி) திட்டம் இலவசச் சுகாதாரப் பரிசோதனை, அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை, கண்காட்சிகள் மற்றும் ஓய்வு நேர நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

இத்திட்டம் இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை மக்களிடத்தில் அறிமுகப்படுத்த மாநில அரசின் அணுகுமுறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :