ALAM SEKITAR & CUACANATIONAL

நாடு முழுவதும் பல இடங்களில் தொடர் கனமழை எச்சரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 1: பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் இந்த வியாழன் வரை அபாயகரமான அளவில் தொடர் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

பகாங்கில் பெரா, பெக்கான் மற்றும் ரோம்பின் ஆகிய இடங்களில் தொடர் கனமழை பெய்யக்கூடும். மேலும், ஜெரண்டுட், பெந்தோங், தெமர்லோ, மாரான் மற்றும் குவாந்தன் ஆகிய பகுதிகளில் மார்ச் 2 வரை மோசமான வானிலை இருக்கக்கூடும் என மெட்மலேசியா இன்று காலை ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தது.

கூடுதலாகத், திரங்கானு, சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய மாநிலங்களிலும் அபாயகரமான அளவிலான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பேராக்கில் உள்ள மஞ்சோங், கிந்தா, பேராக் தெங்கா, கம்பார், பாகான் டத்தோ, ஹிலிர் பேராக், பத்தாங் பாடாங் மற்றும் முஹாலிம் ஆகிய இடங்களும் அடங்கும்.

இதற்கிடையில், பகாங்கில் கேமரன் ஹைலேண்ட்ஸ், லிபிஸ் மற்றும் ரவூப் ஆகிய இடங்களிலும் இதே வானிலைதான் இருக்கக்கூடும்.

– பெர்னாமா


Pengarang :