NATIONAL

பாயுங் ரஹ்மா திட்டத்தில் நாட்டில் சுமார் 30 பல்பொருள் அங்காடிகள் இணைந்துள்ளன 

புத்ராஜெயா, மார்ச் 7: கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்ட பாயுங் ரஹ்மா திட்டத்தில் நாட்டில் சுமார் 30 பல்பொருள் அங்காடிகள் இணைந்துள்ளன என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் அயூப் தெரிவித்தார்.

பாயுங் ரஹ்மா திட்டத்தில் பங்கேற்கும் பல்பொருள் அங்காடிகளில் 12 வகையான அடிப்படை பொருட்களை வாங்கும் போது B40 குழுவினர் RM24 வரை சேமிக்க முடியும்.

“இந்த திட்டம் B40 மற்றும் பரம ஏழைகளின் வாழ்க்கைச் செலவின சுமையைக் கையாள்வதில் அரசாங்கத்திற்கு உதவும்” என்று அவர் கூறினார்.

வாழ்க்கைச் செலவைக் கையாள்வதற்காகச் செயல்படுத்தப்பட்ட பாயுங் ரஹ்மா திட்டத்தில் ரஹ்மா மெனு, ரஹ்மா விற்பனைத் திட்டம் மற்றும் ரஹ்மா பேக்கேஜ் ஆகியவை அடங்கும்.

கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ரஹ்மா மெனு திட்டம் குறித்து அவர் கூறுகையில், 5 ரிங்கிட் மற்றும் அதற்கும் குறைவான விலையில் உணவின் தரத்தைப் பராமரிக்கும் உணவகங்களை நடத்துபவர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

“ரஹ்மா மெனு உணவின் தரம் தொடர்பான புகார்கள் எனக்கு வரவில்லை. அதனால், உணவகங்களை நடத்துபவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன், ஏனெனில் அவர்கள் தரத்தில் சமரசம் செய்யவில்லை,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :