SELANGOR

மலிவு விற்பனையில் பழங்கள், காய்கறிகள் அதிகரிக்கப்பட வேண்டும்- பொது மக்கள் கோரிக்கை

கிள்ளான், மார்ச் 15- அடிப்படை உணவுப் பொருள்களை மலிவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் சிலாங்கூர் அரசின் ஜெலாஜா ஏசான் ராக்யாட் விற்பனை பொது மக்களின் கவனத்தைத்தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

தனது இருப்பிடத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்படும் இந்த மலிவு விற்பனையில் பங்கேற்பதை தாம் ஒரு போதும் தவறவிட்டதில்லை என்று குடும்ப மாதான ஹஷிடாதுல் பராஹிடா ஹஷிம் (வயது 34) கூறினார்.

கடந்தாண்டு தொடங்கி இதுவரை கிள்ளான் வட்டாரத்தில் நடைபெற்ற பத்துக்கும் மேற்பட்ட மலிவு விற்பனைகளில் நான் கலந்து கொண்டுள்ளேன். இங்கு விற்கப்படும் பொருள்கள் விலை மலிவாக இருப்பதோடு மட்டுமின்றி புதிதாகவும் உள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த மலிவு விற்பனை ரமலான் மாதம் தொடங்கி நோன்புப் பெருநாள் வரை அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்று மெலாத்தி ஜைன் (வயது 48) தெரிவித்தார்.

இந்த மலிவு விற்பனை நோன்புப் பெருநாள் சமயத்தில் அடிக்கடிநடத்தப்பட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும். நோன்பு துறப்பதற்கு வேண்டிய உணவுகளைத் தயார் செய்வதில் இந்த திட்டம் பெரிதும் துணை புரியும் என அவர் குறிப்பிட்டார்.

உண்மையில் இந்த மலிவு விற்பனை வழி பணத்தை மிச்சப்படுத்த முடிகிறது. 100 வெள்ளியில் கோழி, அரிசி, மீன், இறைச்சி, முட்டை ஆகிய பொருள்கள்களை வாங்கி விட்டேன் என்று அவர் சொன்னார்.

செமென்தா தொகுதி ஏற்பாட்டில் இங்குள்ள எம்.பி.கே.கே. கெராயோங் 2 பாலாய் ராயா பகுதியில் நடைபெற்ற மலிவு விற்பனையின் போது அவர் இவ்வாறு கூறினார்.

இந்த மலிவு விற்பனையில் இதுவரை தாம் மூன்று முறை பங்கேற்று பொருள்களை வாங்கியுள்ளதாக 73 வயதான அப்துல் பாக்கி பாஸீர் தெரிவித்தார். இந்த விற்பனையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் கடல் உணவு வகைகளையும் சேர்த்து மலிவான விலையில் விற்றால் மேலும் அதிகமானோர் பயன்ப பெற வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.


Pengarang :