SELANGOR

மலிவு விற்பனையில் பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் – சுங்கை துவா தொகுதி

கோம்பாக், மார்ச் 16: நேற்று சுங்கை துவா தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட மலிவு விற்பனையில் மொத்தம் 300 கோழிகள் மற்றும் 300 பலகை முட்டைகள் விற்பனை தொடங்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன.

எனவே, சுங்கை துவா தொகுதியின் சமூகச் சேவை மைய மேலாளர் கூறுகையில், சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகம் (பிகேபிஎஸ்) பொருட்களின்  அளவை   அதிகரிக்க வேண்டும், இதனால் அதிகமான குடியிருப்பாளர்கள் பயனடைவார்கள்.

“அதிக தேவையின் காரணமாக நாங்கள் அதிக எண்ணிக்கையில் குறிப்பாக கோழி இறைச்சியைக் கேட்கிறோம். மேலும், பாட்டில் எண்ணெய் சிறிய அளவுக்கு மாற்றப்படுவது நலம் என்று நாங்கள் நம்புகிறோம், “என்று அவரைச் சந்தித்தபோது கூறினார்.

இதற்கிடையில், சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழக உதவி மேலாளர் சைஃபுல் அஸ்ரஃப் லோக்மான் கூறுகையில், தற்போதைக்குத் தனது தரப்பு குடியிருப்பாளர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது, குறிப்பாக ரமலான் மாதத்திற்கு முன்பாக மேம்படுத்த எண்ணம் கொண்டுள்ளோம் என்றார்.


Pengarang :