PENDIDIKAN

 கோல சிலாங்கூர் தேசிய வகை வாகீசர் தமிழ்ப்பள்ளியின்  முதலாம் ஆண்டு  மாணவர்  அறிமுக விழா

கோல சிலாங்கூர்  மார்ச் 18- தேசிய வகை வாகீசர் தமிழ்ப்பள்ளியின் முதலாம் ஆண்டு மாணவர் அறிமுக விழா (2023)  வாகீசர் தமிழ்ப் பள்ளியில்  தலைமை ஆசிரியை திருமதி : பெண்ணரசி தனபால் அவர்களின்  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முதலாம் ஆண்டு மாணவர் அறிமுக விழாவில் சுமார் 48- மாணவர்களும்,அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு அவர்களின் முகத்தில் புன்னகை  மலர செய்தனர். சிறப்பாக தொடங்கிய முதலாம் ஆண்டு மாணவர் அறிமுக விழாவில் தொடக்க உரையை தலைமை  ஆசிரியை திருமதி: பெண்ணரசி தனபாலன் அவர்கள்  பேசுகையில் வாகீசர் தமிழ்பள்ளியின் நோக்கம் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவது. .அதே சமயம் சிறப்பாகத் கற்றறிந்த மாந்தர்களை உருவாக்குவதுதான் எங்களின் நோக்கம். என்று கூறினார்.
சமுதாய  வளர்ச்சியில்  தமிழ்ப்பள்ளிகளின் பங்கு
நாம் ஒரு செடியை வளர்த்தோம் என்றால் அதற்கு முதலில் நீரூற்றி அதனை அறுவடைசெய்வதற்கு ஏறக்குறைய 3 -வாரங்கள் அல்லது 4 – வாரங்களில் அதன் பயனை நாம் பார்த்துவிடலாம். ஆனால்  மாணவ \ மாணவிகளை வளர்த்து நல்வழிப் படுத்தவே அவர்களுக்கு கல்வியை  அளிக்கிறோம்.

பள்ளிகளில்  எழுத்தை மட்டும் கற்றுத்தருவதல்ல,  நற்பண்புகளையும் ஊட்டி   அவர்களுக்கு உயிரோட்டம் கொடுக்கும்  ஒரு நீண்ட கால பயணத்தில்  தமிழ்ப்பள்ளிகள் ஈடுப் பட்டுள்ளதாக கூறினார்.

ஒரு பெண் கருவை சுமந்து ,பிறகு அவர்களுக்கு பாலூட்டி ,சீராட்டி அதன் பின் பாலர் பள்ளிக்கு  அனுப்புகிறோம். ஆசிரியர்கள்  மாணவர்களை 7 -வயது  முதல் அவர்கள் மனதில் சுமந்து வீட்டிற்கும்  நாட்டிற்கும்  நல்ல குடிமக்களாக உருவாக்கும்  பொறுப்பை மட்டுமின்றி , இச் சமுதாயத்திற்கும் , நாட்டிற்கும் தலைமை ஏற்கும் மாமனிதர்களாக  அவர்களை உருவாக்குவதும்  ஆசிரியர்களின் தலையாய பணி என  ஆசிரியர்களின்  சிறப்பை  போற்றி,  பெற்றோர்களும்  ஆசிரியர்களும்  ஒன்றுபட்டு செயல்படுவதால்  சமுதாய தோட்டமான  பிள்ளைகள் சிறப்பாக மலருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 


Pengarang :