SELANGOR

கடந்தாண்டு 6,000 கோடி வெள்ளிக்கும் அதிகமான முதலீட்டை சிலாங்கூர் பதிவு செய்தது- டத்தோ தெங் தகவல்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 21- சிலாங்கூர் அரசு கடந்தாண்டு முழுவதும் பல்வேறு துறைகளில் 6,000 கோடி வெள்ளிக்கும் அதிகமான முதலீட்டைப் பதிவு செய்தது.

கடந்தாண்டு நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட மொத்த முதலீட்டில் 22.7 விழுக்காட்டை இது பிரதிபலிக்கிறது என்று முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாம் கிம் கூறினார்.

இந்த முதலீடு பல்வேறு துறைகளைக் குறிப்பாக உற்பத்தித் துறையை உள்ளடக்கியுள்ளது. கடந்தாண்டு முழுவதும் 1,220 கோடி வெள்ளி மதிப்பிலான 265 முதலீடுகளை மாநில அரசு ஈர்த்தது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து மேலும் அதிகமான முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் சிலாங்கூர் தீவிரம் காட்டி வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் நாடுகளின் எல்லைகள் திறக்கப்பட்டு விட்டதால் இந்த முயற்சி சாத்தியமடைய வாய்ப்புகள் உள்ளன என்று அவர் சொன்னார்.

கடந்தாண்டு தொழில்துறை சார்ந்த 200 திட்டங்களை ஈர்த்த தன் வாயிலாக அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய முதலீட்டு மையமாக சிலாங்கூர் விளங்குவது நிரூபணமாகியுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த வாரம் கூறியிருந்தார்.


Pengarang :