SELANGOR

சுபாங் ஜெயா மாநகராட்சியின் தெருநாய்கள் காப்பக திட்டம் 

ஷா ஆலம், மார்ச் 21: சுபாங் ஜெயா மாநகராட்சி, இனி சுற்றுப்புறங்களில் நாய்கள் சுற்றித் திரிவதையும், குடியிருப்பாளர்களின் அமைதியையும் பாதுகாப்பையும் சீர்குலைக்காமல் இருக்கும் வகையில் தெருநாய்கள் காப்பகம் கட்டும்.

“மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ள இந்தத் திட்டம் தெருநாய்களின் பிரச்சனைக்கான தீர்வுகளில் ஒன்றாகும். மேலும் சுபாங் ஜெயா மாநகராட்சி தங்குமிடம் கட்ட அடையாளம் கண்டுள்ள மூன்று இடங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுப்போம்.

“நாங்கள் நாய்களைப் பிடிப்பதற்கு தகுந்த முறையைப் பற்றி யோசிப்பதை தவிர, கூண்டுகளைப் பயன்படுத்தி தெரு நாய்களைப் பிடிக்கும் முறையைப் பார்க்க பினாங்குக்குச் சென்று  வந்தோம் ” என்று அவர் கூறினார்.

சுல்குர்னைன், தெருநாய்களின் இருப்பிடங்கள் குறித்து  புகாரளிக்க அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பை கோரினார்.

“நாய் துரத்தி கடித்த வழக்குகள் இருப்பது உண்மைதான், ஆனால் அது தனிமைப் படுத்தப்பட்ட வழக்காக இருக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்டவர் குழந்தையாக இருந்தால் கற்பனை செய்து பாருங்கள்.

எனவே, இந்த தெரு நாய்களுக்கு சாப்பிட எதுவும் தர வேண்டாம் என்று உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்,”என்று அவர் கூறினார்.


Pengarang :