SELANGOR

கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் சிறந்த சேவைக்கான விருதை 17 இந்தியர்கள் உள்பட 127 பேர் பெற்றனர்

கிள்ளான், மார்ச் 22- கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் 2022 ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான விருதளிப்பு நிகழ்வு கடந்த சனிக்கிழமை இங்குள்ள டேவான் ஹம்சாவில் நடைபெற்றது.

நகராண்மைக் கழகத் தலைவர் நோராய்னி ரோஸ்லான் தலைமையில் நடைபெற்ற இந்த விருதளிப்பு நிகழ்வில் 17 இந்தியர்கள் உள்பட 127 பேர் சிறப்பு சேவைக்கான விருதைப் பெற்றனர்.

இந்த விருதைப் பெற்றவர்களில் ப.பாண்டியன், எஸ்.வீரன், ஆர்.கருணாகரன், தங்கராஜூ, சிவஞானம், கே.கணபதி, கே.முத்துப்பாண்டியன், எஸ்.சிவஜோதி, ஆர்.ரகு, கனகராஜா, எம்.மதன், எம்.சேகர், தனபாலு, எஸ்.சுப்பையா, எஸ்.இந்திரா, பி.காமினி, லோகேஸ்வரி, ஆகியோரும் அடங்குவர்.

இந்த விருதளிப்பு நிகழ்வில் உரையாற்றிய நோராய்னி, கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்கினை ஆற்றி வரும் ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த நிகழ்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.

விருது பெற்ற அனைத்து ஊழியர்களும் தொடர்ந்து முழு கடப்பாடுடன் தங்கள் சேவையை ஆற்றி வரும் அதேவேளையில் நகராண்மைக் கழகத்தின சேவைத் தரத்தை உயர்த்தும் விதமாக உயர்நெறி, திறன் மற்றும் சிறப்பான சேவை அணுகுமுறையைக் கடைபிடிப்பர் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் இருவருக்கு நகராண்மைக் கழகத் தலைவரின் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டதோடு பணி ஓய்வு பெறும் 25 பேரும் கௌரவிக்கப்பட்டனர் என்றார் அவர்.


Pengarang :