SELANGOR

நாளை இரவு நடைபெற உள்ள  புவி மணி நேர  (எர்த் ஹவர் கேம்பேனுக்கு) எம்.பி.எஸ்.ஏ பொதுமக்களை அழைக்கிறது

ஷா ஆலம், மார்ச் 22: நாளை இரவு 8.30 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நடைபெறும் புவி மணி நேர  காப்பு ( எர்த் ஹவர் கேம்பேனில)் பங்கேற்க பொதுமக்களை ஷா ஆலம் நகர சபை (எம்.பி.எஸ்.ஏ) அழைக்கிறது.

ஷா ஆலமை குறைந்த கார்பன் வெளியிடும்   நகரமாக்கும் நோக்கில் இந்த முயற்சி  மேற்கொள்ளப்படுவதாக, மாநகரசபை  (PBT) தெரிவித்துள்ளது.

புவி மணிநேர  “எர்த் ஹவர் கேம்பேனுக்குகான ஆதரவின் அடையாளமாக, வியாழன் (மார்ச் 23) இரவு 8.30 முதல் 9.30 மணி வரை ஒரு மணி நேரம் மின்சார விளக்குகளை அணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

“நமது பூமியைக் காப்போம். #EarthHour2023 அல்லது #weloveshahalam என்ற ஹேஷ்டேக்குடன் உங்கள் எர்த் ஹவர் புகைப்படம் அல்லது வீடியோவைப் பகிரவும்,” என்று அவர் பேஸ்புக் மூலம் கூறினார்.

கடந்த ஆண்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைச் சமாளிக்கவும் மாநில அரசு புவி மணிநேர எர்த் ஹவர் கேம்பேனை ஏற்பாடு செய்தது.

அந்த முயற்சியின் மூலம், தனியார் துறையின் ஈடுபாட்டை வரவேற்பதோடு, அந்த காலகட்டத்தில் PBT மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட மாநில அரசு கட்டிடங்களும் இதைச் செய்ய அழைக்கப்படுகின்றன.

Pengarang :