NATIONAL

இந்திய தொழில் துறைகளுக்கு ஒரு மாதத்தில் நல்ல செய்தி- அமைச்சர் வ சிவகுமார் கூறுகிறார் 

பத்து காஜா, மார்ச் 26- அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கும் சிகையலங்கரிப்பு நிலையங்கள் ஜவுளிக் கடைகள் மற்றும் நகைக் கடைகளுக்கு இன்னும் ஒரு மாதத்தில் நல்ல செய்தி வரும் என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

ஜவுளிநகைக் கடை பொற்கொல்லர்சிகையலங்கரிப்பு ஆகிய தொழில் துறைகளுக்கான அந்நிய தொழிலாளர் பிரச்சினை பற்றாக்குறை நிலவுகிறது .

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இந்த பிரச்சினை நிலவி வருகிறது. இதற்கு ஒரு தீர்வு காண  உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் மற்றும் உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சாலாவூடின் ஆயோப் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது..

இருந்தாலும் இதற்கு தீர்வு சிறந்த முறையில் தீர்வு காண வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது.

 உள்துறை அமைச்சு, உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவினத்துறை அமைச்சு, மனிதவள அமைச்சு ஆகியவை இந்த விவகாரத்திற்கு தீர்வு காணும் அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

கிட்டத்தட்ட அனைத்து நடவடிக்கைகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் மூன்று அமைச்சர்களும் இணைந்து இதற்கான அறிவிப்புகளையும் செய்வோம் என்று நேற்று பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் 31 பள்ளிவாசல்களுக்கு நிதியை வழங்கிய பின்னர் நிருபர்களிடம் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Pengarang :