SELANGOR

விற்பனை இயந்திரங்கள் மூலம் B40 தரப்பினருக்கு உணவு விநியோகம் – பண்டார் உத்தாமா தொகுதி

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28: மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு (B40) உணவை விநியோகம் செய்யும் நடைமுறையை  பண்டார் உத்தாமா தொகுதி,   இயந்திரமயமாக்கியுள்ளது

மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன் கூறுகையில், இச்சேவை பொதுமக்களுக்கு உதவி மற்றும் தகவல்களை அனுப்ப உதவுகிறது.

“இந்த திட்டம் பொதுமக்களுக்குக் குறிப்பாக B40 தரப்பினர் தகவல்களைப் பெறுவதை எளிதாக்குகிறது. அதில் ஸ்கீம் மெஸ்ர ஊசிய , பிங்காஸ், இன்சான் மற்றும் ருமா சிலாங்கூர் கூ ஆகிய திட்டங்கள் அடங்கும்

சுய சேவை இயந்திரத்தின் செயல்பாட்டிற்காக முதல் மூன்று மாதங்களுக்கு 100 பெறுநர்களின் இ-வாலட் கணக்குகளில் RM100 வரவு வைப்பதற்காக அவரது தரப்பு RM30,000 ஒதுக்கியதாக அவர் கூறினார்.

“இந்த முன்னோடி திட்டத்தின் மூலம் 19 உணவுப் பொருட்கள், 45 தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் மற்றும் மருந்துகள் நிரப்பப்பட்ட இரண்டு இயந்திரங்களைப் பங்சாப்புரி காயு ஆராவில் நாங்கள் வைத்துள்ளோம்.

“இது பெறுநருக்கு வசதியாக இருக்கும். ஏனெனில் இது 24 மணி நேரமும் செயல்படும். அதனால், இ-வாலட்டைப் பயன்படுத்தி எந்த நேரத்திலும் வாங்குவதன் அவர்களுக்குத் தேவையான பொருட்களைப் பெற முடியும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :