SELANGOR

சபாக் தொகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரொக்க மற்றும் உபகரண உதவி

ஷா ஆலம், மார்ச் 28- பூச்சிகளின் தொல்லையால் பாதிக்கப்பட்ட சபாக்
சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு
மாநில அரசு 200 வெள்ளி உதவித் தொகையை வழங்கியது.

இது தவிர அவர்களுக்கு விதைகள் மற்றும் விவசாய உபரணங்கள்
வாங்குவதற்காக உதவியும் நல்கப்பட்டதாகத் தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் அகமது முஸ்தாயின் ஓத்மான் கூறினார்.

கடந்த 12 பருவங்களாக அதாவது ஆறு ஆண்டுகளாக இந்த பூச்சித்
தொல்லையால் இங்குள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்
ஒவ்வோராண்டும் இங்கு நெல் உற்பத்தி குறைந்து வருகிறது என்று அவர்
சொன்னார்.

முன்பு ஒவ்வொரு பருவத்தின் போதும் சராசரி ஒன்பது டன் நெல்லை
உற்பத்தி செய்வோம். ஆனால் இம்முறைதான் அறவே உற்பத்தி இல்லாத
நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இப்பிரச்சனை காரணமாகப் பல விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டு
தங்கள் நிலத்தில் ஹோம் ஸ்தேய் எனப்படும் தினசரி வாடகை
குடியிருப்புகளை நிர்மாணிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்றார் அவர்.

வசதி உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களை இதர மேம்பாட்டுத்
திட்டங்களுக்கு மாற்றி விடுகின்றனர். ஆனால் ஏழை விவசாயிகள்
அவ்வாறு செய்ய முடியாமல் பெரும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர் என
அவர் கூறினார்.


Pengarang :