SELANGOR

அனைத்து ரமலான் பஜார்களிலும் ‘ஸ்மார்ட் & கிரீன்’ கருப்பொருள் அறிமுகம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 30: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) இந்த ஆண்டு அதன் நிர்வாகப் பகுதியில் உள்ள அனைத்து ரமலான் பஜார்களிலும் ‘ஸ்மார்ட் & கிரீன்’ கருப்பொருளை அறிமுகப்படுத்தியது.

டத்தோ பண்டார்  பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூரை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பூஜ்ஜிய கார்பன் திட்டங்களைச் செயல் படுத்துவதற்கான மாநில அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த திட்டம் இருப்பதாக கூறினார்.

“இந்த ஆண்டு, பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி ரொக்கமில்லா கட்டண முறையை செயல்படுத்துவதற்கும், அனைத்து ரமலான் பஜார் இடங்களிலும் மக்கும் வகை பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதற்கும் வர்த்தகர்களை ஊக்குவிக்கிறது,” என்று முகமட் அஸான் முகமட் அமீர் கூறினார்.

ரொக்கமில்லாப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், ரமலான் பஜார் வருகையாளர்களுக்குத் தலா RM15 மதிப்புள்ள 2,000 கூப்பன்களை அவரது தரப்பு வழங்கியதாக முகமட் அஸான் கூறினார்.

“பெட்டாலிங் ஜெயா வில் உள்ள அனைத்து ரமலான் பஜார்களிலும் உணவு வாங்கும் போது பணமில்லா பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த கூப்பன் வழங்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

தாமான் ஸ்ரீ மஞ்சா ரம்ஜான் பஜாரில் பணமில்லா பயன்பாடு குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்த ஆண்டு 60 சதவீத வர்த்தகர்கள் பணமில்லா தளத்தை பயன்படுத்தினர் என்றார்.


Pengarang :