SELANGOR

முதியவர்களுக்கு உகந்த பகுதியை உருவாக்க எண்ணம் – ஷா ஆலம் மாநகராட்சி

ஷா ஆலம், மார்ச் 30:  ஷா ஆலம்  ஸ்மார்ட் சிட்டியின் இலக்குகளை 2023-2030 ஆம் ஆண்டுக்குள்  அடைவதற்கு (எம்பிஎஸ்ஏ)  பாதுகாப்பு மற்றும்   முதியோர்களுக்கான நலன் அம்சங்களை அதிகரிக்க உள்ளது.

முதியவர்கள்  நலன் நட்புறவான திட்டங்கள்  மற்றும்  பாதுகாப்பு  சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும்

மேயர் டாக்டர் நோர் ஃபுவாட் அப்துல் ஹமீட், வயதானவர்கள் ஓய்வெடுக்க ‘ஏஜ்  சிட்டி“ நகரத்தை உருவாக்க தனது தரப்பு திட்டமிட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

“மலேசியாவின் புள்ளியியல் துறை (DOSM) அறிக்கையின்படி, ஷா ஆலமின் மக்கள்தொகை அதிகரிப்பு 800,000க்கும் அதிகமாக உள்ளது மற்றும் 65 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதானவர்களின் மொத்த மக்கள்தொகை 2020 இல் ஏழு முதல் எட்டு சதவிகிதம் அதிகரிக்கும்.

“இவ்வாறு, ஷா ஆலம் ஸ்மார்ட் சிட்டி செயல் திட்டம் 2023-2030 பயிலரங்கத்தின் மூலம், மைக்ரோமொபிலிட்டியுடன் தொடர்புடைய முதியோருக்கான நட்பு பகுதியை உருவாக்குவோம்,” என்று அவர் கூறினார்.

“இதுவரை எங்களிடம் கிட்டத்தட்ட 200 சிசிடிவிகள் உள்ளன, அவற்றில் 60 மாநில அரசால் வழங்கப்பட்டது, மற்ற 100 எம்பிஎஸ்ஏ முயற்சியால் பெறப்பட்டவை ஆகும். இந்த கேமராக்கள் அனைத்தும் ஸ்மார்ட் சிலாங்கூர் கட்டளை மையம் மற்றும் புக்கிட் அமான் காவல் நிலையத்தால் கண்காணிக்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஸ்மார்ட் சிட்டியை அடைவதற்கான உத்திகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பற்றி விவாதிக்க ஷா ஆலம் ஸ்மார்ட் சிட்டி செயல் திட்டம் 2023-2030 பயிலரங்கை நேற்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு எம்பிஎஸ்ஏ ஏற்பாடு செய்தது.

ஷா ஆலம் மாநகராட்சி திட்டமானது, பங்குதாரர்கள் மற்றும் மூலோபாய கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவதற்கான தளத்தை வழங்கும் வகையில், ஸ்மார்ட் சிட்டியை நோக்கிய திட்டத்தை படிப்படியாகவும் முறையாகவும் முடிக்க பங்கேற்பாளர்களிடமிருந்து உள்ளீடு மற்றும் தகவல்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த பட்டறையில் ஷா ஆலம் மாநகராட்சி ஊழியர்கள், ஸ்மார்ட் சிலாங்கூர் டெலிவரி யூனிட், மலேசியன் மல்டிமீடியா கம்யூனிகேஷன்ஸ் கமிஷன், சிலாங்கூர் ஏர் மேனேஜ்மென்ட், மற்றும் சிலாங்கூர் யுடிலிட்டி காரிடார் போன்ற வெளி நிறுவனங்களில் இருந்து 150 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Pengarang :