SELANGOR

நோன்புப் பெருநாளை முன்னிட்டு 37,250 ஏழைக் குடும்பங்களுக்குத் தலா 200 வெள்ளி பற்றுச் சீட்டு

ஷா ஆலம், மார்ச் 30- நோன்புப் பெருநாளை முன்னிட்டு மாநிலத்திலுள்ள
குறைந்த வருமானம் பெறும் 37,250 குடும்பங்களுக்கு தலா 200 வெள்ளி
மதிப்புள்ள பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும்.

பெருநாள் கால ஷோம் ஷோப்பிங் திட்டத்தின் கீழ்
சம்பந்தப்பட்டவர்களுக்கு வெகு விரைவில் இந்த பற்றுச்சீட்டுகள்
வழங்கப்ப்படும் என்று சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
வீ.கணபதிராவ் கூறினார்.

கடந்தாண்டில் 100 வெள்ளியாக இருந்த இந்த பற்றுச்சீட்டின் மதிப்பு
இவ்வாண்டில் 200 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்,
இத்திட்டத்திற்காக மாநில அரசு 74 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை
ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.

பொது மக்களுக்கு குறிப்பாக வசதி குறைந்தவர்களுக்கு உதவுவதில் மாநில
அரசு கொண்டுள்ள கடப்பாட்டை இந்த திட்டம் புலப்படுத்துகிறது. நிதிச்
சுமை இல்லாத சூழலில் அனைவரும் பெருநாளை மகிழ்ச்சியுடன்
கொண்டாட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்றார் அவர்.

இதனிடையே, இந்த பற்றுச்சீட்டுகளைப் பெறுவோர் தங்களுக்குத்
தேவையான பொருள்களை வாங்கிக் கொள்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட
சட்டமன்றத் தொகுதிகள் அந்த தந்த தொகுதிகளில் பேரங்காடிகளைத்
தேந்தெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாங்கள் தேர்ந்தெடுக்கும் பேரங்காடிகளின் விபரங்களை சம்பந்தப்பட்ட
சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களிடம் தெரிவிப்பர். நோன்புப் பெருநாளுக்கு
முன்பாக அந்த பற்றுச்சீட்டுகளை விநியோகம் செய்வதற்கான
நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம் என்று அவர்த மேலும்
சொன்னார்.


Pengarang :