SELANGOR

ஷா ஆலம் மாநகராட்சி உணவை சேமிப்போம் ‘’மைசேவ் பூட்“ திட்டத்தின் மூலம் 1,663 கிலோகிராம் உணவு, பானங்களைச் சேகரித்துள்ளது

ஷா ஆலம், ஏப்ரல் 2: ஷா ஆலம் மாநகராட்சி நேற்று வரை உணவை சேமிப்போம் ‘’மைசேவ் பூட்’’  திட்டத்தின் மூலம் 1,663 கிலோகிராம் உணவு மற்றும் பானங்களை சேகரித்துள்ளது.

அதன் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர், 830.31 கிலோ உணவு மற்றும் மீதமுள்ளவைப் பானங்கள் எனக் குறிப்பிட்டார்.

ரமலான் முன்னிட்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பஜார் தளத்தில் செக்‌ஷன் 7, செக்‌ஷன் 17 மற்றும் செக்‌ஷன் 20 ஆகிய மூன்று இடங்களில் ஷா ஆலம் மாநகராட்சி இருந்ததாகவும் ஷாஹ்ரின் அஹ்மட் கூறினார்.

“அதிகப்படியான உணவு மற்றும் பானங்களை வீணாவதை தவிர்ப்பது மற்றும் அவை வீட்டுக் கழிவுகள் ஆவதை குறைப்பது, குறிப்பாக குப்பைக் கிடங்குகளில் அப்புறப்படுத்தப்பட வேண்டிய அதிகப்படியான உணவை, அதற்குப் பதிலாகப் தேவைப்படும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு விநியோகிப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

“2021 ஆம் ஆண்டில், 855.4 கிலோ உணவு மற்றும் பானங்கள் சேகரிக்கப்பட்டன. கடந்த ஆண்டு அது 2,294.4 கிலோவாக அதிகரித்துள்ளது,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

கடந்த ஆண்டு ஷா ஆலம் மாநகராட்சி “World Wide Fund-Malaysia (WWF)“ உடன் இணைந்து செக்‌ஷன் 19, செக்‌ஷன் 25 மற்றும் செக்‌ஷன் U5 ஆகிய மூன்று இடங்களில் இதே திட்டத்தை ஏற்பாடு செய்தது.


Pengarang :