SELANGOR

உணவு கையாளுதல் மற்றும் விதிமுறைகளை மீறியதற்காக வணிகர்களுக்கு 71 அபராதங்கள் வழங்கப்பட்டுள்ளன

ஷா ஆலம், ஏப்ரல் 3: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி உணவு கையாளுதல் மற்றும் விதிமுறைகளை மீறியதற்காக கடந்த ஆண்டு அதன் நிர்வாகப் பகுதியில் உள்ள வணிகர்களுக்கு 71 அபராதங்கள், 212 நோட்டிஸ்கள் மற்றும் 94 இடமாற்றங்களை வழங்கியது.

வணிகர்கள் உரிமம் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கு இணங்குதல் உறுதி செய்யும் நோக்கில் பி.பி.டி ஆல் 6,061 பரிசோதனை நடவடிக்கை  மேற்கொள்ளப் பட்டதாக மேயர் முகமட் அஸான் எம்.டி அமீர் கூறினார்.

“சோதனை நடவடிக்கையின் மூலம் மொத்தம் 149 வர்த்தகர்களின்  குற்றங்கள் கண்டறியப்பட்டன,  அதாவது டைபாய்டு ஊசி சான்றிதழ் (TY2) இல்லாமை, அப்ரன் மற்றும் காலணிகள் அணியாதது போன்றவையாகும்.

அது தவிர, பதிவு செய்யப்படாத வெளிநாட்டு உதவியாளர்களின் சேவைகளைப் பயன்படுத்தியது,  முறையான குப்பைத் தொட்டிகளை ஏற்பாடு செய்யாதது போன்ற குற்றங்களும் அடங்கும்.


Pengarang :