NATIONAL

பிரதமரின் சீனப் பயணத்தின் வழி 244 கோடி வெள்ளி ஏற்றுமதி வாய்ப்புகளை மலேசியா பெற்றது

கோலாலம்பூர், ஏப் 5- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வாரம் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக 244 கோடி வெள்ளி மதிப்பிலான ஏற்றுமதி வாய்ப்புகளை மலேசியா பெற்றுள்ளது.

மலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெய், உணவு, பானங்கள், டுரியான்
மற்றும் இரும்புப் பொருள்களை கொள்முதல் செய்ய சீன
இறக்குமதியாளர்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக மாட்ரேட் எனப்படும்
மலேசிய வெளி வர்த்தக மேம்பாட்டுக் கழகம் கூறியது.

மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக சீனா விளங்கி
வருவதாக அக்கழகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

மலேசியா கடந்தாண்டு 4,800 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள
பொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ததாக அது குறிப்பிட்டது.

பிரதமர் தனது சீனப்பயணத்தின் ஒரு பகுதியாக மலேசிய மற்றும் சீன
நாட்டு முதலீட்டாளர்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்திடும் சடங்கையும் பார்வையிட்டார்.

மலேசியாவில் பெட்ரோகெமிக்கல் மற்றும் வாகனத் தொழில் துறையில்
3,860 கோடி டாலரை சீனா முதலீடு செய்யவுள்ளதாகப் பிரதமர்
அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.


Pengarang :