NATIONAL

மலாக்கா ஆட்சிக்குழுவில் மூன்று புதுமுகங்கள்- இருவர் நீக்கம்

மலாக்கா, ஏப் 5– மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாகப்
பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் ஒருவர் உள்பட மூன்று புதியவர்கள்
இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதே சமயம்
ஆட்சிக்குழுவில் இடம் பெற்றிருந்த இருவருக்கு இம்முறை இடம்
வழங்கப்படவில்லை.

ஹராப்பான் கூட்டணியின் ஒரே உறுப்பினரான சியா சூ சின்
தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவாகர
ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில ஆட்சிக்குழுவில் இடம் பெற்றுள்ள பத்து உறுப்பினர்களும் இன்று
காலை 8.00 மணிக்கு யாங்டி பெர்த்துவா நெகிரி துன் முகமது அலி
ருஸ்தாம் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

அசாஹான் சட்டமன்ற உறுப்பினர் ஃபைருள் நிஸாம் ரோஸ்லான் மற்றும்
ஆயர் லீமாவ் உறுப்பினர் டத்தோ ஹமிட் மைடின் குஞ்சு பாஷிர்
ஆகியோர் ஆட்சிக்குழுவில் புதிதாக இடம் பெற்றுள்ள இதர இரு
உறுப்பினர்களாவர்.

ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமது ஜைலான் காமிஸ்
மற்றும் செர்க்காம்க உறுப்பினர் டத்தோ ஜைடி அத்தான் ஆகிய
இருவருக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மலாக்கா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டத்தோஸ்ரீ அப்துல் ராவுஃப்
யூசோ கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.


Pengarang :