SELANGOR

28 ரமலான் பஜார்களில் உணவு வீணாக்கப்படுவதைத் தவிர்க்கும் பிரச்சாரம்

ஷா ஆலம், ஏப்ரல் 5: உள்ளாட்சி நிர்வாகத்தின் (பிபிடி) கீழ் உள்ள 28 ரமலான் பஜார்களில் உணவு வீணாக்கப் படுவதைத் தவிர்க்கும் பிரச்சாரத்தைச் செலாயாங் நகராட்சி (எம்பிஎஸ்) தொடங்கியுள்ளது.

ரமலான் மாதத்தில் உணவுக் கழிவுகளின் சதவீதம் அதிகரிப்பதை சமூகத்திற்கு உணர்த்துவதே ‘உணவைப் போற்றுங்கள், வீண் விரயத்தை தவிர்த்தல்! பிரச்சாரத்தின் நோக்கமாக உள்ளது என்று யாங் டிபெர்துவான் டத்தோ முகமட் யாசிட் சாய்ரி கூறினார்.

“செலாயாங்கில் உள்ள சமூகம், குறிப்பாக ரமலான் மாதத்தில், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த பிரச்சனையில் அதிக அக்கறையுடன் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பஜார் மேலாளர்களிடம் பிரச்சாரத்தின் சின்னமாக ஒரு பேனர் வழங்கப்படும். மேலும் அது எம்பிஎஸ்ஸின் கீழ் உள்ள 28 ரமலான் பஜார்களில் நிறுவப்படும்.


Pengarang :