NATIONAL

ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து சிறுவன் மரணம்

கோலாலம்பூர், ஏப் 5- ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து
ஏழு வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் இங்குள்ள
ஸ்தபாக், ஜாலான் லங்காவியில் நேற்று நிகழ்ந்தது.

அச்சிறுவன் விழுந்து கிடந்ததை இரவு 7.00 மணியளவில் அறிந்த பொது
மக்கள் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் அளித்தனர்.

சோமாலிய பிரஜையான அந்த ஏழு வயதுச் சிறுவன் அந்த ஆடம்பர
அடுக்குமாடி குடியிருப்பின் ஏ புளேக்கில் குர்ஆன் வகுப்பில் கலந்து
கொண்டு வீடு திரும்பிய போது இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

தன் மகனை அழைத்து வரச் சென்ற அவரின் தாயார் அவர் எங்கும்
காணப்படாததைத் அறிந்து மிகுந்த பதட்டத்திற்குள்ளானார்.
அந்த சிறுவனின் திருக்குர் ஆன் புத்தகம் அடங்கிய பை அடுக்குமாடி
குடியிருப்பின் பி புளோக்கில் இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.


Pengarang :