SELANGOR

426 கிலோகிராமிற்கும் அதிகப்படியான பஜார் உணவு சேகரிக்கப்பட்டது

ஷா ஆலம், ஏப்ரல் 6: ரம்ஜான் பஜார் யுஎஸ்ஜே 4 சுபாங் ஜெயா வில் உபரி உணவுகளை சேகரித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பிரச்சாரத்தின் வழி சட்டமன்ற உறுப்பினரின் உதவியுடன்  இதுவரை 426.12  கிலோ  கிராம்  உபரி உணவு சேகரிக்கப்பட்டுள்ளது.

அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  மிக்கேல் இங்,   உணவை வீணாக்குவதை தவிர்க்க தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க,  Syarikat What A Waste  ( எம்மாதிரியான விரயம் நிறுவனத்துடன்) இணைந்து கடந்த மார்ச் 29 ஆம் தேதி பிரச்சாரம் தொடங்கப்பட்டது என்றார்.

“இதுவரை மொத்தம் 426.12 கிலோ உணவு சேகரிக்கப்பட்டுள்ளது, இதில் 1,065.30 கிலோ பசுமை இல்ல வாயு வெளியேறுவதை தவிர்க்கலாம்.

“உணவு கழிவுகள் ஒவ்வொரு நாளும் குறைந்து வருவது ஒரு நல்ல அறிகுறியாகும், பஜாரில் உணவு வாங்குவதில் மும்முரமாக இருக்கும் போது, சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதில் பங்கு வகிக்க இந்த பிரச்சாரத்தை நினைவூட்டுங்கள்,” என்று அவர் பேஸ்புக் மூலம் கூறினார்.

மார்ச் 29 நாள் அன்று, பிரச்சாரத்தின் மூலம் 702 கிலோ கார்பன் உற்பத்தி செய்யும் 300 கிலோ உணவை மிச்செல் சேகரித்தார்.

உண்மையில், மார்ச் 17 ஆம் நாள் அன்று, அதே நிறுவனத்துடன் இணைந்து நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்ற sidang Dewan Negeri Selangor  (டிஎன்எஸ்) அமர்வின் மூன்று நாட்களில் 177 கிலோ உபரி உணவை அவர் சேகரித்தார்.


Pengarang :