NATIONAL

நோன்புப் பெருநாளை முன்னிட்டு கூடுதல் உள்நாட்டு விமான சேவை

சிப்பாங், ஏப் 6- நோன்புப் பெருநாளை முன்னிட்டு சபா, சரவா உள்பட
உள்நாட்டு பயணங்களுக்கான விமானச் சேவையை விமான நிறுவனங்கள்
அதிகரிக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு கூடுதல் விமானச்
சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இந்நோக்கத்திற்காக அகண்ட உடலமைப்பு கொண்ட விமானங்களை மலேசியன் ஏர்லைன்ஸ் பயன்படுத்துவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

விமானச் சேவையை அதிகரிப்பதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டத் தகவல் மேவ்கோம் எனப்படும் மலேசிய வான் போக்குவரத்து ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இன்று இங்குள்ள சாலாக் திங்கி இ.ஆர்.எல். இரயில் நிலைய கிடங்கில் எக்ஸ்பிரஸ் ரெயில் லிங்க் சென்.பெர்ஹாட் நிறுவனத்தின் (இ.ஆர்.எல்.) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பயணச்சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் விமான இருக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன் மூலம் டிக்கெட் விலையும் குறையும் என அந்தோணி லோக் குறிப்பிட்டார்.


Pengarang :