MEDIA STATEMENTNATIONAL

பட்டாசுகள் கடத்துவதாக நம்பப்படும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

கோலாலம்பூர், ஏப்ரல் 7: கடந்த செவ்வாய்கிழமை கிளந்தான், மாச்சாங்கில் பட்டாசுகளை கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காவலர்கள் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.

சட்ட நடவடிக்கையை எதிர் கொள்வதுடன், சட்டத்திற்கு புறம்பாக அரசாங்க வாகனத்தை சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட பயன்படுத்தியதற்காக காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் டான் ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார்,

அரச மலேசிய போலீசார் இம்மாதிரி விவகாரங்களில் (பி.டி.ஆர்.எம்) சமரசம் செய்யாது, அதன் உறுப்பினர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருந்தால் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்கிழமை, லான்ஸ் கார்போரல் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் தனது நண்பருடன் RM25,000 மதிப்புள்ள பல்வேறு வகையான பட்டாசுகள் எடுத்துச் சென்ற போது மச்சாங்கில் கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு சந்தேக நபர்கள் நாளை வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அக்ரில் சானி கூறினார்.

எந்தவொரு தவறான அல்லது சட்ட விரோதமான செயல்களையும் எதிர்த்து நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு, உண்மையான தகவல்களை அனுப்ப சமூகத்தை அவர் வரவேற்றார்.


– பெர்னாமா


Pengarang :