ECONOMYNATIONAL

புது கிராமங்கள் தனக்கே உரிய தனித்துவமும், ஈர்ப்பும் கொண்டது – உலகில் வேறு எங்கும் கிடையாது

புதிய கிராம மேம்பாடு EXCO மார்ச் மாதம் வரை, RM1.5 மில்லியன் சாலைகள் அமைக்கவும், வடிகால்களை மேம்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய கிராமத்தில் சமூக மேம்பாட்டுத் திட்டத்திற்கு கூடைப்பந்து மைதானம் மற்றும் பொது சீரமைப்புகள் பலவற்றை செய்யும் திட்டத்திற்கு மானியத்தை  பயன்படுத்திக் கொள்ளலாம்.

“சிலாங்கூரில் உள்ள அனைத்து 77 புதிய கிராமங்களையும் மேம்படுத்த கூடுதல் ஒதுக்கீடு ஆதாரங்கள் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று இங் ஸீ ஹான் ஊராட்சி மன்றங்கள், பொது போக்குவரத்து, புதுக் கிராம மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

பெவிலியன் புக்கிட் ஜாலில் பெஸ்தா சிலாங்கூர் புதிய கிராமம்-ஐஎன்ஜி திறப்பு விழாவில் நேற்று அவர் இவ்வாறு கூறினார். விழாவை உள்ளூராட்சி மேம்பாட்டுத்துறை அமைச்சர் ங்கா கோர் மெங் தொடங்கி வைத்தார்.

புதிய கிராமம் என்பது வெறும் கிராமாக அன்றி, வரலாறு அல்லது கடந்த காலத்துடன் தொடர்புடையது.  பல்வேறு சீன இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு நாட்டின் தனித்துவமான வரலாற்றுத் தயாரிப்பின் வெளிப்பாடாகும் என்றும் இங் ஸீ ஹான்  கூறினார்.

தனக்கே உரிய தனித்துவம், ஈர்ப்பு கொண்ட இதுபோன்ற ‘தனி தன்மை மிக்க குடியிருப்பு’ (கிராமம்) உலகில் வேறு எங்கும் இல்லை’’ என்றார்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2023 பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, புதிய கிராம மேம்பாட்டு மற்றும் இதர திட்டங்களுக்கு 4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடுகளை அறிவித்தார்.

அந்தத் தொகை 2022 இல் கிடைக்கப் பட்ட RM3.6 மில்லியனை விட அதிகமாகும்  என்றார்   அவர்.


Pengarang :