NATIONAL

கெடாவில் மானிய விலை டீசல் மோசடியில் ஈடுபட்ட அறுவர் கைது

புத்ராஜெயா, ஏப் 11- மானிய விலை டீசல் மோசடியில் ஈடுபட்டதாக
நம்பப்படும் மூன்று அந்நிய நாட்டின உள்பட ஆறு பேரை உள்நாட்டு
வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்க அதிகாரிகள்
கைது செய்துள்ளனர்.

கெடா மாநிலத்தின் சுங்கை பட்டாணியில் உள்ள சுங்கை லாலாங்
தொழில் பேட்டைப் பகுதியில் இரு கிடங்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட
ஓப்ஸ் திரிஸ் நடவடிக்கையின் போது இந்த மோசடி அம்பலத்திற்கு
வந்தது.

டீசலை பதுக்கி வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் அவ்விரு
கிடங்குகளிலிருந்தும் 579,050 வெள்ளி மதிப்புள்ள 31,000 லிட்டர் டீசல்
பறிமுதல் செய்யப்பட்டதாக அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ
அஸ்மான் ஆடாம் கூறினார்.

முதலாவது கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 34,450 வெள்ளி
மதிப்புள்ள 3,000 கிலோ டீசல் கைப்பற்றப்பட்டது. எனினும் அங்கு
நடத்தப்பட்ட சோதனையில் யாரும் பிடிப்படவில்லை.

இரண்டாவது கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது
லோரியிலிருந்து டாங்கிக்கு டீசலை மாற்றிக் கொண்டிருந்த 24 முதல் 49
வயது வரையிலான அறுவர் வளைத்துப் பிடிக்கப்பட்டனர். இந்த
சோதனையின் போது 544,600 வெள்ளி மதிப்புள்ள 28,000 லிட்டர் டீசல்
பறிமுதல் செய்யப்பட்டது என அவர் தெரிவித்தார்.

அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்குச் சந்தேகம் வராமலிருப்பதற்காக
இரசாயன பொருளை ஏற்றும் டேங்கர் லோரியை இக்கும்பல் தனது டீசல்
கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தி வந்த து விசாரணையில் தெரிய
வந்துள்ளது என்றார் அவர்.


Pengarang :