SELANGOR

ராயா சட்டைகளை நன்கொடையாக வழங்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், ஏப்ரல் 12: கம்போங் துங்கு தொகுதி, ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு வழங்க பயன்படுத்தப்பட்ட ராயா சட்டைகளை நன்கொடையாக வழங்குமாறு பொது மக்களை அழைக்கிறது.

பெரும்பாலும் குறைந்த வருமானம் கொண்ட  (B40) குடும்பங்களை சேர்ந்த  ஸ்ரீ அமான் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு இந்த ஆடைகள் வழங்கப்படும் என்று அத் தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் லிம் யி வெய் தெரிவித்தார்.

“சிலாங்கூர் கம்போங் துங்கு யூத் மொபைலைசர் #BundleRaya திட்டம் இரண்டாவது பதிப்பைத் தொடங்கியுள்ளது.  ஹரி ராயா ஐடில்பித்ரியை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கொண்டாடுவோம், உங்களின் ‘பிரியமான’ ராய ஆடைகளை சேகரித்து எங்களுக்கு வழங்குவோம்.

“எங்களுக்கு பாஜு குருங், பாஜு மலாயு, பாஜு கேபயா, சாம்பிங், சொங்காக், துடோங், கெரோங்சாங், காலணிகள் போன்ற ஆடைகள் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவை” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

பொதுமக்கள் ஏப்ரல் 10 முதல் 13 வரை மற்றும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கம்போங் துங்கு தொகுதி சேவை மையத்திற்கு ஆடைகளை அனுப்பலாம்.

மேலும் தகவலுக்கு, நூர் ரஹீம் நசீரை 018-906 0270 என்ற எண்ணில் வாட்சாப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :