SELANGOR

ஜெலஜா காசே ரமலான் திட்டத்தின் கீழ் 40 ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு ஐடில்பித்ரி உதவி

ஷா ஆலம், ஏப்ரல் 20: கின்றாரா தொகுதியின் சமூக சேவை மையம் (PKM) கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெலஜா காசே ரமலான் திட்டத்தின் கீழ் 40 ஏழை குடும்பங்களுக்கு ஐடில்பித்ரி கொண்டாட்டத்திற்கான உதவியை வழங்கியது.

அதன் பிரதிநிதி இங் ஸீ ஹான், இந்த நிகழ்வு கடந்த சில ஆண்டுகளாக சேவை மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வருகிற வருடாந்திர நிகழ்ச்சியாக உள்ளது என்றார்.

“இந்த நிகழ்வு தாமான் புன்ஜாக் ஜலீலில் தொடங்கி, பாங்சாபுரி எங்காங்கங் பிகே6, பெருமஹான் பிகே4, தாமான் கின்றாரா 4, தாமான் கின்றாரா 5 (தாமான் மாவார்), பூச்சோங் இந்தான், பூச்சோங் இண்டா, பூச்சோங் பெர்டானாவில் முடிவடைந்தது.

இந்தச் சுற்றுப்பயணத்தின் மூலம், அத்தொகுதி மக்களின் நிலையை நாங்களே நேரில் பார்த்துக் கொள்ள முடிந்தது. மேலும் அவர்களுக்குத் தொடர்ந்து உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்,” என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.

மாநில அரசின் எஸ்கோ ஆகவும் இருக்கும் அவர், இந்த உதவியானது, கின்றாரா மக்களின் ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை உற்சாகப் படுத்தும் என்று நம்புகிறார்.

முன்னதாக, மசூதிகள் மற்றும் சூராவ்களுக்கு ரமலான் திட்டத்தினை மேற்கொள்ள  அவரது கட்சி RM34,000 ஒதுக்கியதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :