NATIONAL

கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் கோழி முட்டைகள் தேவைக்கு போதுமான அளவில் உள்ளன

புத்ராஜெயா, ஏப்ரல் 22: ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு கிழக்குக் கடற்கரையில் உள்ள பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளில் பல்வேறு தரங்களின் கோழி முட்டைகள் போதுமான அளவில் உள்ளன என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் அயூப் தெரிவித்தார்.

ஐடில்பித்ரி முன்னதாகக் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் முட்டை விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, கிளந்தான் மற்றும் திரங்கானுவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகள் மற்றும் மார்க்கெட்களில் ஆய்வுகளை நடத்திய உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

“கிளந்தான் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களின் 225 கடைகளில் கோழி முட்டைகள் விற்கப் படுவதைத் தொடர்ந்து கண்காணிக்கப் படுகிறது.

“ஏப்ரல் 20, 2023 வரை புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பல்வேறு தரங்களில் மொத்தம் 220,140 கோழி முட்டைகள் இன்னும் சந்தையில் கிடைக்கின்றன” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக, கிளந்தனில் கோழி முட்டைக்கான விநியோகப் பிரச்சனை இல்லை என்பதையும், இந்த பண்டிகைக் காலத்தில் முட்டைகள் போதுமானதாக இருப்பதையும் தான் கண்டறிந்ததாக சலாவுடின் கூறினார். மேலும், ஆய்வுகள் மூலம் கிளந்தான் முழுவதும் கோழி முட்டை விநியோகம் சீராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

“திரங்கானுவில்,கட்டுப்பாட்டு தரத்தில் இருந்த முட்டைகள் இன்னும் ஏராளமாக உள்ளன மற்றும் அவை நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது,” என அவர் கூறினார்.

அவர் கூறுகையில், பொதுமக்கள், குறிப்பாகக் கிழக்குக் கடற்கரையில் உள்ள நுகர்வோர்கள் அச்சம் அடைய வேண்டாம் என்றும், பண்டிகைக் காலங்களில் கோழி முட்டைகளை வாங்கும் போது சந்தையில் அதன் விநியோகத்தில் இடையூறு ஏற்படாமல் இருக்க பொறுப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஐடில்பித்ரியைச் சிறப்பாகக் கொண்டாடுவதை உறுதி செய்வதற்காக, இந்த பண்டிகைக் காலத்தில் உட்பட நாடு முழுவதும் ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் தீவிரப்படுத்தும் என்றார்.

– பெர்னாமா


Pengarang :