SELANGOR

ஹரி ராயா ஐடில்பித்ரி, பண்டிகையின்  சூழ்நிலைகளை உணர்ந்து போற்ற  சிறப்புக் குழந்தைகள் பயிற்றுவிப்பு 

ஷா ஆலம், ஏப்ரல் 22:ஹரி ராயா ஐடில்பித்ரி, பண்டிகைகளின்   சூழ்நிலைகளை உணர்ந்து  ஏற்கும் மனப்பான்மையை போதிக்கும் வகையான நிகழ்வுகளை சிலாங்கூர் சிறப்புக் குழந்தைகள் துறை (AnIS), அவர்களுக்கு பயிற்றுவிக்கிறது.

ஏஜென்சியின் கூற்றுப்படி, முஸ்லிம் குழந்தைகள் இந்த நடவடிக்கையில் ஈடுப்பட்டு அதற்கு ஏற்ப நடக்க பயிற்றுவிப்பதுடன் இது போன்ற சூழ்நிலைகளை பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு  வீட்டில் ஏற்படுத்தி தரலாம், இந்த செயலை செய்ய முயற்சி செய்யலாம்,” என்று சமீபத்தில் முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

நடத்தப்பட்ட உருவகப்படுத்துதல் களில் ஒருவருக்கொருவர் வாழ்த்துதல், கெத்துபாட் மடித்தல் மற்றும் குவ்வே ராயா செய்தல் ஆகிய நடவடிக்கைகள் அடங்கும்.

மேலும், சிறப்புக் குழந்தைகளுக்கு ஒரு பையில்  அவர்களின் துணிகளை அழகாக அடுக்கி வைத்தல், பிரார்த்தனை செய்தல் மற்றும் டுயட் ராயாவைப் பெறும்போது எப்படி நடக்க வேண்டும்  என்பது பற்றியும் கற்பிக்கப்பட்டது.

2018 இல் அறிமுகப்படுத்தப் பட்டதில் இருந்து அனிஸ் மூலம் சிலாங்கூரில் உள்ள சிறப்புக் குழந்தைகளின் திறன்களை மேம்படுத்துவது உள்ளிட்ட கல்விக்கு முன்னுரிமை அளிப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. இந்த ஆண்டு இந்த நடவடிக்கைக்கு RM5 மில்லியனுக்கு கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று டத்தோ மந்திரி புசார் தெரிவித்தார்.

ஐந்து முதல் ஆறு வயது வரையிலான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பகல்நேர பராமரிப்பு மையம் (OKU) நிறுவப்பட்டதன் மூலம், வருமானம் குறைந்த பெற்றோரின் சுமையை ஓரளவு குறைக்க உதவ முடிந்தது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.


Pengarang :