NATIONAL

நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று காலை போக்குவரத்து சீராக இருந்தது

கோலாலம்பூர், ஏப் 24- நோன்புப் பெருநாளின் மூன்றாவது நாளான இன்று 9.00 மணி நிலவரப்படி காலை நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து சீராகக் காணப்பட்டது.

நோன்புப் பெருநாள் விடுமுறை இன்றுடன் முடிவுக்கு வருவதால் இன்று மதியம் தொடங்கி சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கத்  தொடங்கும் என எதிர்பார்க்கப் படுவதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தித்தின் பேச்சாளர் கூறினார்.

இது வரை ஒரு சாலை விபத்து மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், சிம்பாங் பூலாயிலிருந்து கோம்பெங் நோக்கிச் செல்லும் தெற்கு தடத்தின் 291.3வது கிலோ மீட்டரில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவித்தார்.

இந்த சம்பவத்தின் காரணமாக சாலையின் எந்த தடமும் மூடப்படவில்லை என்பதோடு வாகனப் போக்குவரத்தும் சீராக உள்ளதாக அவர் சொன்னார்.

இதனிடையே, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 79.5வது கிலோ மீட்டரின் தெற்கு நோக்கிச் செல்லும் வழித்தடத்தில் பண்டார் மற்றும் குருண் இடையே லோரி ஒன்று பழுதடைந்துள்ளதாக பிளஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக நெடுஞ்சாலையின் இடது தரம் மூடப்பட்டுள்ள  போதிலும் போக்குவரத்து சீராக உள்ளதாக அது தெரிவித்தது.


Pengarang :