NATIONAL

6 இடங்களில் நடைபெறும் மடாணி மலேசியா ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமருடன் கலந்துகொள்ள அழைப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 25: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த சனிக்கிழமை முதல் 6 இடங்களில் நடைபெறும் மடாணி மலேசியா ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் தன்னுடன் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கான அழைப்பிதழைப் பிரதமர் தனது முகநூல் மற்றும் ட்விட்டரில் நேற்று பகிர்ந்துள்ளார்.

“மடாணி மலேசியா ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் உடன் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் முகநூல் மூலம் தெரிவித்தார்.

தொடக்கமாக, இந்நிகழ்வு கெடாவில் ஏப்ரல் 29 அன்று ராயா ஹோட்டல் அலோர் ஸ்டாரில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

பின்னர் இது மே 6 ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பினாங்கில் உள்ள யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா (யுஐடிஎம்) பெர்மாதாங் பாவ் மற்றும் மறுநாள் காலை 10.30 மணி முதல் மாலை 3 மணி வரை விஸ்மா மஜ்லிஸ் சிரம்பானில் தொடரும்.

கிளந்தானில் இந்நிகழ்வு மே 12 அன்று கோத்தா பாருவில் உள்ள சுல்தான் முஹம்மது IV அரங்க மைதானத்தில் நடைபெறும். தொடர்ந்து மறுநாள் திரங்கானுவில் இந்நிகழ்வு டேவான் அல்-முக்தாபி பில்லா ஷா, யுனிவர்சிட்டி சுல்தான் சைனல் அபிடின் (யுனிசா), கோலா திரங்கானுவில் நடைபெறும்

அவ்விரு மாநிலங்களிலும் இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை இந்த திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வு நடைபெறும்.

இறுதியாக இந்நிகழ்வு மே 14 ஆம் தேதி இரவு 8 மணி முதல் 11 மணி வரை சிலாங்கூரில் உள்ள தாமான் ஸ்ரீ கோம்பாக், பத்து கேவ்ஸில் உள்ள 3 ஆம் பிரிவு வணிகப் பகுதியில் நடைபெறும்.

– பெர்னாமா


Pengarang :