NATIONAL

பட்டாசு வெடித்து ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் அமைதியைக் குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

ஷா ஆலம், ஏப்.25: பொது இடங்களில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பட்டாசு வெடித்து ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் அமைதியைக் குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான், கோம்பாக்கில் காயங்கள் ஏற்படுத்திய சம்பவம் சிறு குற்றச் சட்டம் 1955 யை மீறியுள்ளதாக கூறினார். அதனைத் தொடர்ந்து இது போன்ற செயல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.

“திறந்த பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், வீட்டின் முன்புறம், நள்ளிரவில் அல்லது மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயலில் ஈடுபடக்கூடாது.

“குறிப்பாக நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு இச்செயலைக் கண்டறிந்தால் அல்லது அதன் தொடர்பாகப் புகார் பெற்றால் காவல்துறை கடுமையாகச் செயல்படும்,” என்று அவர் சமீபத்தில் கூறினார்.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் பட்டாசு வெடித்தால் சிறு குற்றச் சட்டம் 1955 [சட்டம் 336] பிரிவு 13 ன் கீழ் வழக்கு தொடரப்படும்.

உயிருக்கு அல்லது உடமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெடி பொருட்களை சேமித்து வைத்தால் அல்லது வெடித்தால், வெடிபொருள் சட்டம் 1957 இன் பிரிவு 7 இன் கீழ் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது RM10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.


Pengarang :